(லியோன்)
தேசிய சிறுவர் பாதுகாப்பு  அதிகாரசபையும் கல்வி அமைச்சும் இணைந்து
நடைமுறைப்படுத்துகின்ற சிறுவர் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்புணர்வு
நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன் . 
         
இதற்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில்
தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான  விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் மண்முனை
வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற சிறுவர் பாதுகாப்புக்
குழுக்களுக்கான விழிப்புணர்வு 
கலந்துரையாடலில்  ஆசிரியர்கள் ,
மாணவர்கள் , பெற்றோர்கள் இடையிலான தொடர்பு  மற்றும்  மாணவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை
ஆசிரியர்கள் எவ்வாறு கையாள்வது , சமூகத்தில் சிறுவர்கள் முகம் கொடுக்கின்ற
சவால்கள் போன்ற  விடயங்கள்  தொடர்பாகவும் , பிள்ளைநேய பாடசாலையின்  அவசியம் குறித்தும் இந்த நிகழ்வில்
கலந்துரையாடப்பட்டது .
இந்நிகழ்வில்  மட்டக்களப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட 15 பாடசாலைகளின் மாணவர்கள் , மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே
.பாஸ்கரன் , மாவட்ட உளசமூக உத்தியோகத்தர்கள் ,அதிபர்கள் ,ஆச்சிரியர்கள் ,
ஆசிரியர்கள் , பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் , சிறுவர் ,பெண்கள் பிரிவு
உத்தியோகத்தர்கள்,   வளவாளராக மாவட்ட
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்  திருமதி
. நிஷா றியாஸ் ஆகியோர் கலந்துகொண்டார் .