ஜெரமியாஸ் சைமன் அடிகளாரின் இறுதி நல்லடக்க ஆராதனை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெறும்

(லியோன்)

இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜெரமியாஸ் சைமன் அரசரெத்தினம் அடிகளாரின் இறுதி நல்லடக்க  ஆராதனை 07.06.2017  புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெறவுள்ளது
    

அருட்தந்தை ஜெரமியாஸ் சைமன் அரசரெத்தினம் அடிகளார் 1924 .11.16 ஆம் திகதி  யாழ்பாணம் பண்டதரிப்பில் பிறந்த அவர்   சைமன் தம்பிராஜா , சைமன் அன்னம்மா  ஆகியோரின் மகனாவார் .

இவரது கல்வி வாழ்க்கையை  தொடர்ந்து 1951.06.29  ஆண்டு  இந்தியாவில் தூத்துக்குடியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

அடிகளாரின் இறைபணி வாழ்க்கையில் 1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் திருகோணமலை  சின்னக்கடை புனித குருவாடலூப்பே ஆலயம் , மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் , மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு ஆலயம் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயம் ஆகிய பங்குகளில் பணிக்காக இணைந்து கொண்டார் .

இவரது இறைபணி வாழ்க்கையில் சூசையப்பர் சிறிய குரு மடத்தில் பதில் இயக்குனராகவும்  கடமை ஆற்றியுள்ளார் .

இறைபணிக்காக தமது வாழ்கையை அர்பணித்த அருட்தந்தை ஜெரமியாஸ் சைமன் அரசரெத்தினம் அடிகளார் கடந்த 03.06.2017 ஆம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் .

அடிகளாரின் இறுதி நல்லடக்க ஆராதனை 07.06.2017  புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்று தொடர்ந்து அருட்தந்தையின் பூதவுடல் மட்டக்களப்பு கள்ளியங்காடு உயிர்ப்பின் உறைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

தகவல் : ஆயர் இல்லம்

மட்டக்களப்பு.