சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மூதூர் பெரியவெளி பிரதேசத்தில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளுக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்ட பேரணி கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் இன்று (5) திங்கள் கிழமை பிற்பகல் பல்கலையின் வந்தாறுமூலையில் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து ஆரம்பமான மாணவர்களின் சிறுமிகளுக்கான நீதி கோரிய ஆர்ப்பாட்ட பேரணியானது பல்கலைகழக பிரதான வாயிற்கதவு வரை சென்றது.

“நாமத்தில் மட்டும் நல்லாட்சியா!, நீதி வே;டும் பெண்கள் நீண்டு வாழ, பிஞ்சுகளை வதைக்கும் நஞ்சுகளை தூக்கிலிடுங்கள், சிறுவர்களை பாதுகாக்கப்படுவர்கள் பழாக்கப்பட வே;டியவர்கள் அல்ல, மெடடுக்களை மலர விடுங்கள்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மூதூர் பெரியவெளி கிராமத்தில் கடந்த 28ம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் உட்பட வித்தியா மற்றம் சேயா போன்ற பெண் சிறுமிகளுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு கிழக்கு பல்கலைகழகத்தில் கற்கும் கலைத்துறை மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.