அமைச்சர் ஜோன் அமரதுங்க ஹிரு ஊடகவியலாளர் மீது தகாத வார்த்தை

சுற்றுலா அபிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க
ஹிரு ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
வத்தளை – போபிட்டிய பிரதேசத்தில் உள்ள குப்பை பிரச்சினை தொடர்பாக
அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
கந்தான பிரதேசத்திலுள்ள அமைச்சரின் கட்சிக் காரியாலயத்தில், இன்று(08) முற்பகல், குப்பை விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பிரதேசவாசிகளும், ஊடகவியலாளர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர், குப்பை விவகாரம் தொடர்பாக எமது சகோதர ஊடகமான ஹிரு ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது, அமைச்சர் ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் தூற்றியதுடன், தாக்கவும் முயற்சித்தார்.
தகவல் அறியும் சட்டம் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள இதேவேணை அரச அமைச்சர் ஒருவர் ஊடவியலாளர் மீது மேற்கொண்ட மிலேச்சித்தனமான செயல் ஊடகத்துறைக்கே பாரீய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறையாக உள்ளது.
அரசியலமைப்பின் 10-14வது சரத்துக்களில் ஒவ்வொரு மனிதனும் சிந்தனை,மதம் மற்றும் பேச்சு,கருத்து வெளிப்பாடு சுதந்திரத்தைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.