திமிலத்தீவு வாவி மீனவர்களுக்கான தங்குமிட கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  திமிலத்தீவு வாவி மீனவர்களுக்கான  தங்குமிட கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு .கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது .


கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் மூலம் அமுல்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய கரையோர வளைய முகாமைத்துவ திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவியைப் பேணும் நடவடிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன .

பிரதான திட்டமாக மட்டக்களப்பு வாவி சுமார் 33 மில்லியன் ரூபா செலவில் எல்லைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளும் . கண்டல் தாவரங்களை பாதுகாத்தல் திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன .

இதன் ஒரு செயல்திட்டமாக வாவி முகாமைத்துவ செயல்திட்டத்தின் கீழ் 0.8 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு   திமிலத்தீவு வாவி மீனவர்களுக்கான  கட்டப்பட்ட  மீனவ தங்குமிட கட்டிடம் கையளிக்கப்பட்டது


கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எ .கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் டி .பாலமுகுந்தன்  கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள  உத்தியோகத்தர்கள் மற்றும் திமிலத்தீவு கிராம சேவை உத்தியோகத்தர் , திமிலத்தீவு கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , திமிலத்தீவு வாவி மீன சங்க அங்கத்தவர்கள், திமிலத்தீவு கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் ,கலந்துகொண்டனர்