அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கான மட்டு மக்களின் மனிதநேய பணி

(லியோன்)

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 


மட்டக்களப்பு மாவட்ட செயலகம் , மட்டக்களப்பு மாநகர சபை , மட்டக்களப்பு மாவட்ட சிவில்  அமைப்புக்கள் , மட்டக்களப்பு மாவட்ட கல்வித்திணைக்களங்கள் , கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அரச அரசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உதவும் முகமாக  கடந்த 29 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிவாரண பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள்  மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொருள் சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொருட்கள் சேகரிக்கப்பட்டன .

அவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும்  பொதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட  இரத்தினபுரி ,காலி மாவட்டங்களுக்கு  அனுப்பி  
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது