மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)

பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
 .

“உங்கள் முன்னேற்றமே எங்களது நோக்கு “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன ஏற்பாட்டில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் நடைபெற்றது .

மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ்  பாவனையாளருக்கு தத்துவமளித்தல்  , வர்த்தக ஒழுங்கு விதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் மூலம் பாவனையாளர் பாதுகாத்தல் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வியாபர கலாசாரமொன்றினை  நன்றாக பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது


இந்த கலந்துரையாடலில் வளவாலர்களாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை  சிரேஷ்ட உத்தியோகத்தர்  எ .ஆர் .அன்வர் சதாத் ,மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜனாப் எஸ் .எல் .எ . சிவாஸ் , டி . சுதர்ஷன். ,மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி .பிரவீனா கோகிலதாஸ், ,திருமதி டிலோஜினி கிருபாகரன் ,,திட்ட உத்தியோகத்தர் செல்லத்துரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் கரித்தாஸ் எகெட் நிறுவக உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு  நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .