கல்லடி பாலத்தில் பாய்ந்த மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை மாணவன் ஒருவர் குதித்துள்ள நிலையில் அவரை தேடும் பணிகளில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

இன்;று காலை கல்லடியில் உள்ள சிவானந்தா தேசிய பாடசாலையில் கணித பிரிவில் கற்றுவரும் அம்பிளாந்துறை,நாகமுனையை சேர்ந்த 17வயதுடைய க.பவனுஷன் என்னும் மாணவன் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளான்.

பாடசாலைக்கு செல்வதாக கூறி பாடசாலை சீருடையுடன் வந்த குறித்த மாணவன் பாலத்தில் புத்தகப்பையினையும் சைக்கிளையும் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளான்.

இதனைக்கண்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்து அங்குவிரைந்த கடற்படையினர் படகுகள் மூலம் தேடுதல் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடற்படையினர் குறித்த மாணவனை தேடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.