மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு சீருடை விநியோகம்.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட
பன்னிரண்டு இளைஞர் கழகங்களுக்கு  சீருடை விநியோகம்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன காரியாலய மண்டபத்தில் 02.06.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் பன்னிரண்டு இளைஞர் கழகங்களுக்கு சீருடை வழங்கி  வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கலந்து கொண்டதுடன் , சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், ஆகியோரும், கெளரவ அதிதிகளாக எஸ்.சுசி, செயற்குழு உறுப்பினர் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு ,
எஸ்.திவ்வியநாதன், தலைவர்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனம் , ரி.விமல்ராஷ் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

மேலும் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா, மனோகரன் சுரேஸ்காந்தன்(கல்வி அமைச்சர்),ஐனாப் ஜமால்தின் முகம்மது திபாஸ், குணரெட்ணம் தூஷாந்தன் ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.