2016ம் வருடத்திற்கான சிறந்த இளைஞர் கழகமாக ஈச்சந்தீவு உதய சூரியன் தெரிவு.


மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிட்குள் 2016ம் வருடம் பதிவு செய்ப்பட்ட 26 இளைஞர் கழகங்களிடையே சிறந்த இளைஞர்கழகமாக தெரிவு செய்யப்பட்டமைக்காகவும் அதே போன்று 2016 ம் வருடம் தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு  இடம் பெற்ற கொடி விற்பனையிலும் பிரதேச ரீதியாக முதலிடம் பெற்றமைக்காகவும்
ஈச்சந்தீவு உதய சூரியன் இளைஞர் கழகத்தினர் வெற்றிக்கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன காரியாலய மண்டபத்தில்  பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் தலமையில் நடைபெற்ற இளைஞர் கழகங்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வின் போதே பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களினால் வெற்றிக்கிண்ணம்
 வழங்கி  வைக்கப்பட்டது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட 29வது இளைஞர் விளையாட்டு பெண்களுக்கான கயிறுழுத்தல்
போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக வவுணதீவு விபுலானந்தா இளைஞர் கழகத்தினரும் முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் அவர்களினால் கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கலந்து கொண்டதுடன் , சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், ஆகியோரும், எஸ்.சுசி, செயற்குழு உறுப்பினர் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு ,
எஸ்.திவ்வியநாதன், தலைவர்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனம் , ரி.விமல்ராஷ் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் , ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும்  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா, மனோகரன் சுரேஸ்காந்தன்(கல்வி அமைச்சர்),ஐனாப் ஜமால்தின் முகம்மது திபாஸ், குணரெட்ணம் தூஷாந்தன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.