அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்காக நிவாரண பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை

(லியோன்)

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால்  பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்காக உதவும் வகையில் நாடளாவிய ரீதியில் பல மனிதநேய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதற்கு அமைய மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் ,சகாயபுர சமாதான குழு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக  சம்மேளனம் ஆகியன இணைந்து  நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால்  பாதிக்கப்பட்டுள்ள  உறவுகளுக்காக உதவும் நோக்குடன் நிவாரண பொருட்கள்  சேகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்   .
இந்த நிவாரண பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கையின் இன்று  காலை முதல்  மட்டக்களப்பு  கூழாவடி பகுதியில் உள்ள  வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நிவாரண சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்         

இந்த பணியில்  கரித்தாஸ் எகெட் , சகாயபுர சமாதான குழு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக  சம்மேளனம்  ஆகியவற்றின்  உறுப்பினர்கள் ,.இளைஞர், .யுவதிகள் ஈடுபட்டுள்ளதுடன் இந்த மனிதநேய பணியில் அனைவரும் இணைந்து உதவிகளை நல்குமாறு அழைப்பு விடுக்கின்றனர்