மட்டக்களப்பின் குடி மகன்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் வாய்கிளியபேசுகின்றோம்.
ஆனால் அதனை குறைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன செய்துள்ளோம் என்பது தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டும்.

யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவான மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 56மதுபானசாலைகள் உள்ளன.இவற்றில் குறிப்பிடதக்க மதுபானசாலைகள் மக்கள் குடியிருப்பு அதிகமான பகுதிகளில் உள்ளன.மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் ,ஆலயங்களுக்கு பெருமளவான நிதியை மதுபானசாலை உரிமையாளர்கள் வாரி இறைப்பதன் காரணமாக யாரும் எதுவும்பேசுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி சாலையின் அளவினைக்குறைக்கவேண்டுமானல் அனைத்து கிராம மட்ட அமைப்புகளும் இணைந்து வீதியில் இறங்கி போராடவேண்டியது மிக அவசியமாகும்.

(பட உதவி –க.இன்பராஜா)