களுதாவளையில் விபத்து –ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து பக்கட்களை ஏற்றிய லொறி ஒன்று களுதாவளை பொது நூலகத்திற்கு அருகாமையில் பிரதான வீதியை கடந்துகொண்டிருந்த  முதியவர் ஒருவர் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 70வயதுடைய ரத்னம் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.