தம்பிலுவில் எதிரோளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன்


வாஜித்அஸ்மல்

 தம்பிலுவில் எதிரோளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்.

தம்பிலுவில் எதிரோளிவிளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர், ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.19ஆந் திகதி எதிரோளி விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. 

இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர்  சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர். 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பொத்துவில் ஃப்ரீலியன்ஸ் அணியினர் கழத்தடுப்பை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தினர் ஆறு (06) ஓவர்களில் நிறைவில் மூன்று விக்கட்டுக்களை இழந்து (88)ஓட்டங்களை பெற்றனர். 14 பத்துவீச்சுக்கு முகம்கொடுத்து 50ஓட்டங்களை மார்க்ஸ்மேன் கழக வீரர் அஸ்தக் பெற்றுக்கொன்டார்.

எதிர்த்தாடிய பொத்துவில் ஃப்ரீலியன்ஸ் அணியினர் (06) ஓவர்கள் நிறைவில் நான்கு(04) விக்கட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர்.  இச்சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டதாயகனாக பொத்துவில் ஃப்ரீலியன்ஸ் கழக வீரர் றிஸாட் தெரிவுசெய்யப்பட்டார்.

 போட்டியில் ஆட்டநாயகன் விருதினை மார்க்ஸ்மேன் கழக வீரர் எச்.அஸ்தக் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மார்க்ஸ்மேன் அணியினருக்கு 50ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பிரிலென்ஸ் அணியினருக்கு  30ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.