Breaking News

இரத்த உறவுகளே அன்னை பூபதி உங்களுக்கு மட்டும் அன்னை அல்ல உலகத் தமிழர்க்கெல்லாம் அன்னை.


(சசி துறையூர்)அன்னை பூபதியின் நினைவு தினம் முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் 19.04.2017 அன்று அன்னாரின் சமாதிக்கு அருகில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய இராணுவத்திற்கு எதிராக அஹிம்சை முறையில் உண்ணா நேன்பிருந்து  உயிர்நீர்த்த தியாகத் தீபம் அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் கல்லடி நாவலடியில் உள்ள அன்னை பூபதியின்  கல்லறைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுப்பேருரைகள் ஆற்றப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அன்னைபூபதியின் உறவினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி நிருவாகிகள், கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களினால் அன்னை பூபதியின் உறவினர்களிடம் அன்னையின் இரத்த உறவுகளே அன்னை பூபதி உங்களுக்கு மட்டும் அன்னை அல்ல உலகத் தமிழர்க்கெல்லாம் அன்னை. அன்னையின் தியாகம் தமிழர்க்கானது அதனை தமிழர்கள் எப்போதும் மறவர்.

90 காலப்பகுதியில் தமிழிழ விடுதலைப்புலிகளின் இசைக்குழுவால் வெளியிடப்பட்ட ஒலிப்பேழையில் அன்னையின் வாழ்க்கைச்சரிதம், தியாகம் பாடல் வடிவில் நினைவுகூறப்படுகிறது.நானும் அவற்றில் ஏழு பாடல்களை எழுதினேன்.

 தேசியத்தலைவர் கூட அப்போது கையேடு மூலம் அன்னையின் தியாகத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அகிம்சை ரீதியான போராட்டம் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை உலகம் திரும்பிப்பார்க்க வைத்தவராக அன்னை பூபதி விளங்கிவருகின்றார்.

பிரித்தானியவிடமிருந்து எந்த போராட்டத்தின் மூலம் காந்தியடிகள் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தாரோ அதே போராட்டத்தை முன்னெடுத்த அன்னை பூபதி இந்தியாவின் முகத்திரையை உலகரங்கில் கிழித்தெறிந்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படாத நிலையில் இம்முறை மூன்று இடங்களில் அனுஸ்டிப்பதாக அறியமுடிகிறது.

2002 வருடம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களினால் மட்டக்களப்பு மாமங்கத்தில் அன்னையின் நினைவுதினம் மிகப்பிரமாண்டமான முறையில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. நீங்கள் அறிவீர்கள். அப்போது போராளிகளும்  இணைந்திருந்தனர்.

அன்னை பூபதி,தியாகி திலீபன் கரும்புலிகள்,ஜம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள்,போராளிகளது தியாகங்களை அர்ப்பணிப்புக்களை எண்ணிப்பாருங்கள் அவற்றினை நாம் ஒவ்வொருவரும் அர்த்தமுள்ளதாக்க பாடுபடவேண்டும் அதற்க்காக இப்போதைய சூழலில் சம்மந்தன் ஜயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டியுள்ளது.

சிலர் உணரமறுக்கின்றனர் நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இலங்கையும் சர்வதேசமும் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதித்துவம் தமிழ்தேசியகூட்டமைப்பு அதன் தலைமை இரா.சம்மந்தன் ஜயாவைத்தான்.

தமிழ் மக்களின் போராட்டம் அஞ்சல் ஒட்ட நிகழ்வாக உள்ளது அன்று தந்தை செல்வா எடுத்த அஹிம்சை போராட்ட கோலை தலைவர் பிரபாகரனிடம் தினித்தார் அவர் 30 வருட காலமாக ஆயுதப்போராட்டமாக ஓடி,  சம்மந்தன் ஜயாவிடம் கைமாற்றினார். இப்போதுவரை சம்மந்தன் ஜயா ஓடிக்கொண்டிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமை  சம்மந்தன் ஜயாவின் முயற்சியும் சித்திரை விளையாட்டு வழுக்குமரம் ஏறும்போட்டியாக உள்ளது.

சம்மந்தன் ஜயா தனித்து இந்த தீர்வுக்கான வழுக்கு மரத்தில்  ஏற முடியாது நாங்கள் எல்லோரும் கைகோர்த்துத்தான் ஏற்றமுடியும்.

36 விடுதலை இயக்கங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் வரையான காலத்தில் தமிழ் மக்களுக்காக போராடியது. ஒப்பந்தத்தின் பின் அவைகளில் பெரும்பாலான இயக்கங்கள் காட்டிக்கொடுக்கும் இயக்கங்களாகவே செயற்பட்டன.

தமிழிழ விடுதலைப்புலிகள் மாத்திரம்தான் இறுதிவரை ஒரே நோக்கோடு போராடியது அவர்களின் போராட்டாம் மெளனித்தபின் அதன் தலைவரினால் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு அரசியல் அமைப்புத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவே அதனை தொடர்ந்தும் குறை கூறாமல் எமது இலக்கை எட்டுவதற்க்காக அன்னை பூபதி போன்ற தியாகிகள், மாவீரர்கள் கண்ட கனவுகளை மெய்ப்பிக்க உறுதி பூணுவோம்.
No comments