61வது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 61வது நாளாகவும் இன்று சனிக்கிழமையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான தொழில் உரிமையினை உறுதிப்படுத்தக்கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்றும் தமது போராட்டத்தினை காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவந்தனர்.

பட்டதாரிகளின் இந்த போராட்டத்திற்கு பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகள்,மதப்பெரியார்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்கிவருகின்றனர்.