மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மாந்தீவில் மாபெரும் சிரமதானமும் மனிதநேயப்பணியும்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனம் ஒன்றினைந்து முன்னெடுத்த மாபெரும் சிரமதானப்பணியும் பூசை வழிபாடும் இன்று வெள்ளிக்கிழமை(21.04.2017) மாந்தீவில் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனேகமான தீவுப்பகுதிகளுல் மாந்தீவு என்பது விசேடமாக குறிப்பிடத்தக்க ஓர் தீவாகும். இங்குதான் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் தொழுநோய் வைத்தியசாலை அமைந்துள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் வரும் இந்த தீவானது அழகிய இயற்கை எழில்கொஞ்சும் பசும்சோலையாக காணப்படுகிறது.

இங்கு இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதான நிகழ்வில் மாந்தீவில் உள்ள முருகன் ஆலய வளாகம் துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.

 அத்தோடு பிற்பகல் வேளையில் இளைஞர்களினால்   பூசை நிகழ்வும் நிகழ்த்தப்பட்டு மாந்தீவில் அமைந்துள்ள தொழு நோய் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறும் தொழு நோயாளிகளுக்கு இளைஞர்களினால் பொங்கல் மற்றும் இனிப்பு பகிர்ந்தளித்து  சினேகபூர்வமாக கலந்துரையாடி அவர்களை ஆற்றுப்படுத்தி மகிழ்வித்தனர்.

இந்த மனிதநேயப்பணியில் மாவட்ட சம்மேளனத்தலைவர் எஸ்.திவ்வியநாதன், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் ரி.விமல்ராஷ், மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான அ.தர்ஷிக்கா,கே.துஸாந்தன்  உட்பட பெருமளவிலான இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.