நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி ரயில் கடவை பாதுகாவலாளிகள் ஆர்ப்பாட்டம்

தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்க கோரி மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை காலை முன்னெடுத்தனர்.

இன்று காலை மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய ரயில் கடவை பாதுகாவலாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நான்கு வருடமாக தாங்கள் ரயில் கடவை பாதுகாவலாளிகளாக கடமையாற்றிவருவதாகவும் இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் திணைக்களம் ஊடாக ஆறு மாத தற்காலிக அடிப்படையில் நியமனம்பெற்ற தாங்கள் கடந்த நான்கு வருடமாக இந்த துறையில் கடமையாற்றிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முhதாந்தம் 7500ரூபா சம்பளமே தங்களுக்கு வழங்கப்படுவதாகவும் 30நாட்கள் வேலைக்கு சென்றால் மட்டுமே இந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும் இதனைக்கொண்டே தங்களது குடும்பத்தின் வாழ்க்கை செலவினை ஈடுசெய்வதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கமாவது தங்களது நிலைமையினை உணர்ந்து தங்களுக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக தாங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தங்களது நிலைமைகள் தொடர்பில் மாவட்ட அரசியல்வாதிகள் பாராமுகமாகவே இருந்துவருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.