திருகோணமலையில் அகாலமரணமான பட்டதாரி பெண்ணுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

திருகோணமலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அகாலமரணமடைந்த திருகோணமலை மாவட்டவேலையற்ற பட்டதாரி சங்க உறுப்பினருக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் 41வது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை திருகோணமலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அகாலமரணமடைந்த திருமதி மாலதி நிசாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது நினைவு பதாகையை ஏந்தியவாறு அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு மன அழுத்தங்களுடன் பட்டதாரிகள் தினமும் வாழ்ந்துவருவதாகவும் அதன் காரணமாக இவ்வாறான மரணச்சம்பவங்கள் கவலையளிப்பதாகவும் இங்கு வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.