கல்முனைதொகுதியில் உருவாக்கப்படமற்றும் உருவாக்கப்பட்டஅபிவிருத்திதிட்டங்களின் சம்பூர்தாய நிகழ்வுகள்

(துறையூர் தாஸன்)

விளையாட்டுத்துறைபிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் “மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்”எனும் தொனிப்பொருளில் கல்முனைதொகுதியில் உருவாக்கப்பட இருக்கின்றமற்றும் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைமக்கள் பாவனைக்காககையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(31) இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமானகௌரவரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்தி திட்டங்களைதிறந்துவைத்து, மக்களிடம் கையளித்தார்.

நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டசேனைக்குடியிருப்பு,இஸ்லாமபாத் மற்றும்  பெரியநீலாவணைபிரதேசங்களில் அமைக்கப்பட்ட சனசமூக சுகாதாரநிலையங்கள் இதன்போதுதிறந்துவைக்கப்பட்டன.

பிரதியமைச்சர் கௌரவஎச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்டமருதமுனை அல்-ஹம்ராவித்தியாலயத்தின் மூன்றுமாடிக் கட்டிடம் மற்றும் மருதமுனை அல்-மனார் மத்தியகல்லூரியின் மகளிர் பிரிவுக்கு மூன்றுமாடிபல்தேவைக் கட்டிடம் என்பனவும் திறந்துவைக்கப்பட்டன.

விளையாட்டுத்துறைபிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாணசுகாதாரஅமைச்சர் ஏல்.எல்.எம்.நஸீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டின் கீழ் விஸ்தரிக்கப்பட்ட சாய்ந்தமருதுமாவட்டவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுகட்டிடமும் திறந்துவைக்கப்பட்டதுடன் வைத்தியசாலைக்குத் தேவையானஒருதொகுதிமருத்துவஉபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் அப்துல் றஸாக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க,விஸ்தரிக்கப்பட்டகல்முனைஆயுள்வேதவைத்தியசாலையும்இதன்போதுமக்கள் பாவனைக்காகதிறந்துவைக்கப்பட்டது.

கல்முனைகிறீன் பில்ட் பிரதேசத்தில் அமைந்துள்ளறோயல் வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்துவரும் இரு மாடிவகுப்பறை கட்டிடத்திற்கானஅடிக்கல் வைக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமானகௌரவரவூப் ஹக்கீம் அவர்களால் முதல் கல் சம்பூர்தயபூர்வமாகவைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறைபிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசால் காசிம்,கிழக்குமாகாணமுதலமைச்சர் கௌரவ நஸீர் அஹமட்,கிழக்குமாகாணசுகாதாரஅமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்குமாகாண,மாகாண சபை உறுப்பினர்களானஅப்துல் றஸாக்,சிப்லிபாறுக்,ஆரிப் சம்சுதீன்,ஐ.எல்.எம்.மாஹிர்,ஜே.எம்.லாஹிர்,பாராளுமன்றஉறுப்பினர்களானஎம்.ஐ.எம்.மன்சூர்,அலிசாஹிர் மௌலானா,முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் ஹீனைஸ் பாருக்,கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ.காதர்,தவிசாளர் அப்துல் மஜீட்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்டகட்சியின் அரசியல் பிரமுகர்கள்,நிர்வாகஅலுவலர்கள் இதன்போதுகலந்துகொண்டனர்.