யொவுன்புரய பூமிக்கு கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் விஜயம்.
திருகோணமலையில் மட்டக்களப்பு யொவுன்புரய பூமிக்கு கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் விஜயம்.

திருகோணமலை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புரய நிகழ்வின் நான்காவது நாளில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் அழைப்பை ஏற்று விருந்தினராக கலந்து கொண்டார் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் அவர்கள் .

விவசாய அமைச்சருடன் அமைச்சின் சொயலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சிப்பிரிவின் பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்னர்.

திருகோணமலை நகரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 6000 உள்நாட்டு வெளிநாட்டு இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் கடந்த 29.03.2017 தொடக்கம் யொவுன்புரய வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.

எட்டாவது யொவுன்புரய பூமிக்கு வருகை தந்த விவசாய அமைச்சர்கள் அவர்கள் யொவுன் புரய வாசிகளான மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் கண்காட்சி கூடங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களையும் பார்வையிட்டார்.

இளைஞர்களோடு சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் இளைஞர்களுக்கு தனது வாழ்த்தினையும் ஆசிர்வாதத்தினையும் தெரிவித்துக்கொண்டார்.