திருகோணமலை யொவுன்புரய பூமிக்கு ஜனாதிபதி விஜயம் .

திருகோணமலை யொவுன்புரய பூமிக்கு ஜனாதிபதி விஜயம் .


கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை   மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடைவையாக  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாரிய வேலைத்திட்டமான யொவுன் புரய நிகழ்வின் இறுதி நிகழ்வில் இலங்கை நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.


எதிர் காலம் உதயமாகிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் விளையாட்டு பொருளாதார, கலை கலாச்சார , தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் போட்டிகள் பல இடம் பெற்றன.

யொவுன்புரய பூமியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகள் மற்றும் சிறந்த மாவட்டம் அழகிய மாவட்டங்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.