தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு

(லியோன்)

அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு  நினைவு தினம்  தமிழ்  தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள  அன்னையின்  சமாதிக்கு அருகில் சனிக்கிழமை (22)  மாலை  அனுஷ்டிக்கப்பட்டது .


அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தினரால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்காக எதிராக அஹிம்சை முறையில் உண்ணா நேன்பிருந்து  போராடி உயிர்நீர்த்த  அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும்  நிகழ்வு  கல்லடி நாவலடியில் உள்ள அன்னை பூபதியின்  சமாதிக்கு அருகில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , பொதுச்செயலாளர் , மாவட்ட இணைப்பாளர் மற்றும் கட்சி உறுப்பினர்களினால்  மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றி  நினைவுரை  ஆற்றப்பட்டது.

அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு  நினைவு தின அனுஷ்டிப்பின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நினைவுரை ஆற்றுகையின் போது தெரிவிக்கையில்   தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை  அங்கிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும்   

தமிழ் மக்களின்  நலன்களை இந்திய அரசாங்கம் பேண முற்படும் போது நாங்களும் இந்திய அரசாங்கத்திற்கு  மதிப்பளித்து  அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு  தயங்கமாட்டோம்.

தமிழர்களை இந்தியா கைவிட்டதால் தான்  அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களின்  உரிமைகளுக்காக  தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்  என தெரிவித்தார்  


அன்னை பூபதியின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும்  நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ,தமிழ் தேசிய முன்னணி தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மட்டக்களப்பு மாவட்ட ,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் இளைஞரணி நிருவாகிகள், கட்சி ஆதரவாளர்கள் என  பலர்  கலந்துகொண்டனர்.