மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த செயலமர்வு

(லியோன்)

மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின்  செயலமர்வு (22) சனிக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது
.

இலங்கை சமாதான பேரவையினால்  ஒழுங்கமைக்கப்பட்ட  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான    சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின் பன்மைத்துவவாத சமூகத்தை கட்டியெழுப்புதல்  எனும் தலைப்பில் செயலமர்வு  தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் நடைபெற்றது .

ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட  தரங்கள் , மதங்கள் ,வர்க்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் வெவ்வேறு பிரிவினராக பிரிந்து வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய சம்பிரதாயங்களை பின்பற்றவும் , அவர்களது கலாசார முறைக்கேற்ப செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் ,சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகின்ற நிலைகள் தொடர்பாக  நடைபெற்ற செயலமர்வில்  கலந்துரையாடப்பட்டது .


பன்மைத்துவவாத சமூகத்தை கட்டியெழுப்புதல்  தொடர்பாக நடத்தப்பட்ட செயலமர்வில் வளவாளராக விடிவெள்ளி ஆசிரியர் எம் .பி .எம் .பைறூஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்