29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா, கூடைப்பந்தாட்டத்தில் மண்முனை வடக்கு இளைஞர் கழகம் சம்பியன்.


(சசி துறையூர்) 29 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு  மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று
(23,04.2017)  ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.  அந்த வகையில் குழுப்போட்டிகளின் வரிசையில் ஆண் பெண் இரு பாலாருக்குமான கூடைப்பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது  இப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர் கழகம் சம்பியின் கிண்ணம் வென்றுள்ளது.

  மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு திடலில் நடைபெற்ற இப் போட்டியில் இறுதிச் சுற்றில் மண்முனை வடக்கு பிரதேச கோட்டமுனை இளைஞர் அணி மற்றும் மண்முனை தென் எருவில் பிரதேச களுதாவளை ஜோர்டன் அணி பலப்பரீட்சை நடாத்தின 43க்கு 47 எனும் புள்ளிக்கணக்கில் மண்முனை வடக்கு அணி வெற்றி வாகை சூடியது.

மற்றுமொரு பெண்களுக்கான சுற்றுப் போட்டியில் ஏறாவூர் பற்று அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இன்று நடைபெற்ற போட்டியின் ஆரம்ப நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.திவ்வியநாதன் , மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி நிசாந்தி அருள்மொழி, திருமதி ஜே.கலாராணி , ஏறாவூர் பற்று  இளைஞர் சேவை அதிகாரி ரி.அழகுராஜா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.