மட்டக்களப்பு சிறைச்சாலையில் சித்திரை புதுவருட கலாசார விளையாட்டு நிகழ்வுகள்

(லியோன்)

சித்திரை  புதுவருட  கலை ,கலாசார  விளையாட்டு நிகழ்வுகள்   இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது .


ஸ்ரீ லங்கா சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்  மற்றும் ஸ்ரீ லங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலை பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் சித்திரை  புதுவருட  கலை கலாசார  விளையாட்டு நிகழ்வுகள்  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது .

சித்திரை  புதுவருட  விளையாட்டு நிகழ்வாக  ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , தேங்காய் திருவுதல் , வினோத உடை என பல கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது . இந்நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றிபற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை  பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க தலைவர் என் பி . ரஞ்சன் , செயலாளர் . வி .பிரதீபன், நலன்புரிச்சங்கத்தின் முன்னாள் தலைவர் வைத்திய நிபுணர் டாக்டர் கே.கருணாகரன் ,சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான , பி .சுசிதரன் .எல் . ஜெயசுதாகரன் .  பி. ஜி . டேவிட் , சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்   மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்    .

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சிங்கள புதுவருட கலை கலாசார விளையாட்டு நிகழ்வில் விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய  நலன்புரிச்சங்கத்தின் முன்னாள் தலைவர் வைத்திய நிபுணர் டாக்டர் கே.கருணாகரன் தெரிவிக்கையில்  சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலையாகி செல்லும் போது  சிறந்தவர்களாக செல்ல வேணடும்.  கைதிகளாக இருக்கும் காலத்தில் அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில்  நலன்புரிச்சங்கம் பணியாற்றுகின்றது .

இவ்வாறான நிலையில் கைதிகள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே  இவ்வாறான புத்தாண்டு நிகழ்வுகளை நடத்துகின்றது .

கைதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனுக்காக இந்த சங்கம் உதவுகின்றது என தெரிவித்தார்