“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” 2017 ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

(லியோன்)

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” 2017 ஞாபகார்த்த  மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்திற்கான  போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  (15) சனிக்கிழமை  நடைபெற்றது
 

அக்கினிச்சிறகுகள் ஒற்றுமையே பலம் அமைப்பின் ஏற்பாட்டில்  கிளிநொச்சி மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் நெறிப்படுத்தலில்   வடக்கு கிழக்கினைந்த “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” 2017 ஞாபகார்த்த மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்திற்கான  உதைப்பந்தாட்ட சுற்றுப்  போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது . 

ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட சங்க  தலைவர் எம் .உதயகுமார் ,மட்டக்களப்பு ,அம்பாறை உதைப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் மற்றும் வடக்கு உதைப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

கடந்த 08.04.2017  சனிக்கிழமை வல்வெட்டித்துறை நெற்கொலு மைதானத்தல் ஆரம்பமான வடக்கு கிழக்கினைந்த  உதைப்பந்தாட்ட சுற்றுப்     போட்டிகள் எதிர்வரும் வரும்  மே மாதம் 16,17,19 ஆம் திகதிகளில்  முல்லைத்தீவு இரணைப்பாலை விளையாட்டு மைதானத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன .

இந்த இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எதிர் வரும்  மே மாதம் “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” 2017 ஞாபகார்த்த  மாபெரும் உதைப்பந்தாட்ட  போட்டியாக நடைபெறவுள்ளது

வடக்கு கிழக்கு தமிழ்பேசும் ‘”தாயக அணியை “ உருவாக்குவதற்கான தெரிவு போட்டியாக இந்த  உதைப்பந்தாட்ட சுற்றுப்  போட்டிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .