முகத்துவாரம் லைட் ஹவுஸ் சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வுகள்

(லியோன்)

சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு   முகத்துவாரம்  லைட் ஹவுஸ் விளையாட்டு   கழகத்தினால் நடத்தப்பட்ட  சித்திரை  புதுவருட  கலை ,கலாசார  விளையாட்டு நிகழ்வுகள்   (16) ஞாயிற்றுக்கிழமை  மாலை   நடைபெற்றது


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு   முகத்துவாரம்  லைட் ஹவுஸ் விளையாட்டு   கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தமிழ் சிங்கள  சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு  பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்   முகத்துவாரம்  லைட் ஹவுஸ் விளையாட்டு   கழக  தலைவர் கே .விஜயகுமார் தலைமையில்  மட்டக்களப்பு   முகத்துவாரம்  லைட் ஹவுஸ் விளையாட்டு   கழக மைதானத்தில் நடைபெற்றது  

புதுவருட  கலை ,கலாச்சார விளையாட்டு  நிகழ்வில்  பாரம்பரிய  கலாசார விளையாட்டு நிகழ்வாக  ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , வலுக்கு மரம் ஏறுதல் ,சாக்கோட்டம் ,தேங்காய் திருவுதல் , கயிறிழுத்தல்   என சிறுவர்கள்  மற்றும் பெரியவர்களுக்கான பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது 

இந்நிகழ்வில் முகத்துவாரம் ,திராய்மடு ,பாலமீன்மடு  கிராம பாடசாலை  சிறுவர்கள் ,கிராம மக்கள் என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக   மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே .கருணாகரன் , மட்டக்களப்புஅம்பாறை பிரதி  பொலிஸ்மா அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொட , அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் ,மட்டக்களப்பு மீன்பிடி நீரியல் வளங்கள் திணைக்கள உதவி பணிப்பாளர் ஆர் .சி  .குருஸ் ,பாலமீன்மடு  கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி  டி .நதிகா , மண்முனை  வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி .பி . பிரசாந்தினி  ,மண்முனை வடக்கு பிரதேச  விளையாட்டு உத்தியோகத்தர் டி .பிரசாத் ,மற்றும்  முகத்துவாரம் ,திராய்மடு ,பாலமீன்மடு விளையாட்டு   கழக உறுப்பினர்கள் ,கிராம பொதுமக்கள் என  பலர் கலந்து சிறப்பித்தனர் .