29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கிரிகெட் போட்டி

(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில்  பதிவு செய்யப்பட இளைஞர் கழகங்களுக்கிடையிலான  கிரிகெட் போட்டி  (15) சனிக்கிழமை நடைபெற்றது .


மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட   பதிவு செய்யப்பட இளைஞர் கழகங்களுக்கிடையிலான  29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கிரிகெட் போட்டி மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளன தலைவர் எஸ் சஜித் தலைமையில் பெண்களுக்கான கிரிகெட் போட்டி  மட்டக்களப்பு ஊரணி காந்தி ஸ்டார் விளையாட்டு மைதானத்திலும் ஆண்களுக்கான கிரிகெட் போட்டி  சன்ரையிஸ் விளையாட்டு கழக மைத்தானத்திலும்   நடைபெற்றது .

பிரதேச செயலக  மட்டத்தில் நடத்தப்படுகின்ற கிரிகெட்  போட்டியில் வெற்றி பெறுகின்ற கழகங்கள்   தொடர்ந்து மாவட்ட மட்டத்திலும் மற்றும் தேசிய  மட்டத்திலும்   இடம்பெறவுள்ள  போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் .

நடைபெற்ற போட்டியின் ஆரம்ப நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரன் , மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் ஆளிதீன் அமீன் , மண்முனை  வடக்கு இளைஞர் சேவைகள் சம்மேளன உத்தியோகத்தர் திருமதி .பி . பிரசாந்தினி   மற்றும்  இளைஞர் கழக சம்மேளன இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்