(சசி துறையூர்)தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்டகாரியாலயத்தில் இன்று 16.03.2017 வியாழக்கிழமை நடைபெற்றது.
கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ்
செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டங்களை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுறுத்தும் வகையில் வருடந்தோறும் இந்த சந்திப்பு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக கரிசனை கொண்ட பெரும்பாலான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்
மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தின் ஹமீர் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே. கலாராணி, திருமதி நிஷாந்தி அருள்மொழி, மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ கூட்டுறவு வங்கி முகாமையாளர் ப.கிருபைராசா, தகவல் மத்திய நிலைய உத்தியோகஸ்தர் ரி.மகேந்திரராஜா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி கெளவிக்கப்பட்டன.
மட்டக்களப்பு அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமை புரியும் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








