(சசி துறையூர்) திருகோணமலை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று 18.03.2017 சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலய
பிரதிப்பணிப்பாளர்(அபிவிருத்தி),
பிரபாத் லியனகே அவர்கள் கலந்து கொண்டதுடன். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு எஸ்.ரவிக்குமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தின் போது திருகோணமலை மாவட்ட சம்மேளத்தின் 2017 ம் வருடத்திற்கான புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் யொவுன் புரய தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.






