மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளி போராட்டம் 26நாட்களையும் கடந்தது

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இதுவரையில் இந்த அரசாங்கம் தீர்வினைப்பெற்றுத்தரவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 26 நாளாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டப்படிப்பினை பூர்த்திசெய்தவர்களை இதுவரையில் அரச சேவைக்குள் உள்வாங்கப்படாத நிலையில் தொழிலற்றவர்களாக சமூகத்தில் இருப்பதன் காரணமாக பல கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மத்திய,மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

தமது நியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் தமது போராட்ட வடிவத்தினை மாற்றவேண்டிய நிலையேற்படும் எனவும் அதற்கான முழுப்பொறுப்பினையும் இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.