ஊருக்கு ஒருகோடி வேலைத்திட்டத்திம், வடமாகாணத்தில் முல்லைத்தீவு வெலிங்டன் இளைஞர் கழகத்திற்கு வெற்றி.

(சசி துறையூர்) கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நேரடி வழிகாட்டல் ஆலோசனையின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சுயாதீன ஊடக ( itn,வசந்த தொலைக்காட்சி) வலையமைப்பு இணைந்து முன்னெடுத்த ஊருக்கு ஒரு கோடி வேலைத்திட்டத்தில் வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் புகளேந்தி நகர் வெலிங்டன் இளைஞர் கழகம் முன்னெடுத்த ஏற்றுநீர் வினியோக வேலைத்திட்டம் ரூபா பத்துஇலட்சத்தினை வெற்றிகொண்டது என முல்லைத்தீவு மாவட்ட , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு மா.சசிகுமார் தகவல் தெரிவித்தார்.

ஊருக்கு ஒரு கோடி வேலைத்திட்டத்தில் நாடு முழுவதும் 1500வேலைத்திட்டங்கள் ரூபா 75000.00 நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டம் ரூபா 22500.00 மேற்பட்ட நிதி பெறுமதி உடையதாக பூர்த்தி செய்யப்படவேண்டிய நிபந்தனை.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 16 வேலைத்திட்டங்கள் அவற்றில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்து. அவற்றில் புகளேந்தி நகர் வெலிங்டன் இளைஞர்கழகம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகாமாக முன்னெடுத்த வேலைத்திட்டமே ஏற்றுநீர் வினியோக வேலைத்திட்டம் .

முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி J.சுகந்தனின் நேரடி வழிநடத்தலில், கிராம சேவக உத்தியோகஷ்தர் திருமதி வி.தூசாந்தி அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டமானது மாவட்டரீதியில் வடமாகாண ரீதியிலும் முதலிடத்தை பெற்று தேசிய ரீதியில் முதல் 9 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டே பரிசுத்தொகையாக பத்துஇலட்சத்தை தட்டிக்கொண்டது.

 கடந்த சனிக்கிழமை இரவு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலையரங்கில் இடம்பெற்ற இறுதி நிகழ்வின் போது இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் கெளரவ நிரோசன் பெரேரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே அவர்களினால் இந்த பரிசுத்தொகை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.