தனியார் கல்வி நிலையங்களில் ஞாயிறு மற்றும் இரவு நேர நடத்தப்படும் வகுப்புக்கள் தொடர்பாக நடவடிக்கை (வீடியோ இணைப்பு )

(லியோன்) 

தனியார் கல்வி நிலையங்களில் காலை ஆறு மணிக்கு முன்னதான வகுப்புக்கள் , ஞாயிறு மற்றும் இரவு நேரம் நடத்தப்படும் வகுப்புக்கள் தொடர்பாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளப்பட உள்ளதாக  சமூக மட்ட விழிப்புணர்வு குழு தலைவி தெரிவித்தார்

 
மட்டக்களப்பு  சமுதாய சார் சீர்திருத்தத் திணைக்களத்துடன் இணைந்து செயல்படும் மட்டக்களப்பு   சமூக மட்ட விழிப்புணர்வு குழுவின் மாதாந்த கூட்டம்  (23) வியாழக்கிழமை மாலை சமூக மட்ட விழிப்புணர்வு குழு தலைவி திருமதி பாரதி கெனடி தலைமையில் மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை பிரிவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந்த மாதாந்த கூட்டத்தின் போது மட்டக்களப்பு பகுதியில் இடம்பெறுகின்ற சமூக விரோத செயல்பாடுகள்  , தனியார் கல்வி நிலையங்கள் , போதைப்பொருள் பாவனை தொடர்பாக  கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

இதன்போது இங்கு உரையாற்றிய  சமூக மட்ட விழிப்புணர்வு குழு தலைவி திருமதி பாரதி கெனடி தெரிவிக்கையில்  மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் தற்போது அதிகரித்து வரும் காலை ஆறு மணிக்கு முன்னதான வகுப்புக்கள்  ,இரவு நேர வகுப்புகள்  ஞாயிறு தினத்தில் நடத்தப்படும் வகுப்புக்கள் தொடர்பாக கண்டறியப்பட்டு  அதற்கான  நடவடிக்கைகளும் , பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான  குடும்ப ஒன்றிணைப்புகளை செயல்படுத்துவதும் ,  அதேபோன்று  போதைபொருள் பாவனையில் ஈடுபடுகின்றவர்களை கண்டறிவதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டு போதைபொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும்  இந்த சமூக மட்ட விழிப்புணர்வு குழு தற்போது மட்டக்களப்பு பகுதியில் முன்னெடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார் .

இந்த மாதாந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் எ சி எ . அசிஸ், பெண்களின் தேவைக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் இனைப்பாளர் திருமதி ஆர் .ருத்ராதேவி , வவுணதீவு பிரதேச செயலாளர் , சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள் , பொது அமைப்புக்களின் பெண்கள் பிரதிநிதிகள்   கலந்துகொண்டனர்