தமிழரசுக்கட்சியின் தலைவரின் பிறந்த தினத்தில் இரத்ததான முகாம் -பெருமளவிலானோர் பங்கேற்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 119வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இரத்ததானமுகாம் ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் பெருமளவான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமின் ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து இரத்ததான முகாம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.