மட்டக்களப்பு யொவுன் புரய பூமிக்கு விஜயம் செய்த பிரதமருக்கு மகத்தான வரவேற்பு.

(சசி துறையூர்)
 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில்  கெளரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் திருகோணமலை யொவுன் புரய பூமிக்கு விஜயம் செய்து இளைஞர்களோடு சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் யொவுன்புரய வளாகத்தையும் மேற்பார்வை செய்ததோடு மட்டக்களப்பு மாவட்ட முகாம் வளாகத்திற்கும் விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் அணிவகுத்து கரஒலி எழுப்பி வரவேற்றதுடன் பொன்னாடை அணிவித்தும் கெளரவிப்பு வழங்கினர்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ். திவ்வியநாதன், இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சர் ரி.சுரேஸ்காந் ஆகியோர் கெளரவ பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஏறந்திக் வெலியங்கே ஆகியோரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள்  மட்டக்களப்பு பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சம்மேளன தலைவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.