எம் ஜே எப் நிறுவன அனுசரணையில் சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் நடைபெற்றது .


எம் ஜே எப் நிறுவன அனுசரணையில் நிறுவன முகாமையாளரும் குழுத் தலைவருமான எஸ் .கமலநாதன் வழிகாட்டலின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் தொழில் புரியும் குடும்பங்களை தலைமை தாங்கும் குடும்ப உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட  குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  போதகர் மரியதாஸ் தலைமையில் ஜெயந்திபுரம் கெத்ச மெனே ஆலய மண்டபத்தில் நடைபெற்றது .

இதன் போது  தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான தையல் இயந்திரங்கள் , மீன்பிடி உபகரணங்கள் , தச்சு மற்றும் மேசன் உபகரணங்கள் , விவசாய உபகரணங்கள் , சிகை அலங்கார உபகரணங்கள் ,நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்ற சுயதொழில் உபகரணங்கள் 92 பேருக்கு   வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா ,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்ன , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற மற்றும் எம் ஜே எப் நிறுவன முகாமையாளர் தமிந்தி ,வாழ்வாதார திட்ட உத்தியோகத்தர்  சாந்த , மட்டக்களப்பு போதகர் ஐக்கிய தலைவர் டி .யேசுதாசன் மற்றும்  எம் ஜே எப் நிறுவன உத்தியோகத்தர்கள்  ,ஊழியர்கள் , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ,பயனாளிகள் என பலர்  கலந்து கொண்டனர்.