ஓருவரால் முடிந்தது ஏனையவரால் முடியாமைக்கு போன காரணம் என்ன –கேள்வியெழுப்பும் மட்டு.பட்டதாரிகள்

தமது நியாயமான போராட்டத்திற்கு உறுதியான தீர்வு எழுத்துமூலம் வழங்கப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 39வது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.

தமது நியமனங்களை வழங்குவதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தினை சத்தியாக்கிரக போராட்டத்தினை முழு வீச்சுடன் மேற்கொண்டுவருகின்றனர்.

இதுவரையில் ஓயாத அலைகள் என்ற தலைப்புடன் நடைபெற்றுவந்த வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 39ஆம் நாள் முன்னேற்றம் என்ற தலைப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டுவந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் ஏனைய அரசியல்வாதிகளுக்கு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாமைக்கு போனதன் காரணம் என்ன எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் கேள்வியெழுப்பினார்.