ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயதத்தில் இருவருக்கு 9ஏ –வரலாற்று சாதனை

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில்  கடந்த ஆண்டு நடை பெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தியை பெற்று குறித்த பாடசாலைக்கு பெருமை ஈட்டியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு க.பொ.த.(சாஃத) பரீட்சைக்கு இப் பாடசாலையில் 44 மாணவர்கள் தோற்றியிருந்தனர் இதில் சத்தியராஜா சதீபன் என்ற மாணவனும் தமிழ்செல்வன் விதுஸ் என்ற மாணவனும் 9 ஏ சித்தயை பெற்றுள்ளதுடன்;, ராஜேஸ்வரன் சண்மிக்கா 8 ஏ,1பி யும் சாந்தகுமார் தனுஷி 8 ஏ 1சி யும் சிவாஜி விதுர்ஷியா 5ஏ,3பி,1ஊ யும் உதயகுமார் சௌமியா 6 யு ,2ஊ 1ளு யும் ஜெயசீலன் யதுமிக்கா 5 ஏ 1பி 1சி  யும் விக்கினேஸ்வரன் ஓவியா 5ஏ,3பி யும் பெற்றுள்ளனர் என்று வித்தியாலய அதிபர் பூபாலபிள்ளை புண்ணியராஜா தெரிவித்தார்.