ஆரையூர் கண்ணகை நூல் வெளியீடும் ஆரையூர் கண்ணகை இறுவெட்டு வெளியிட்டு நிகழ்வு

மட்;டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க ஆரையம்பதி ஸ்ரீகண்ணகியம்மன் ஆலயத்தின் வரலாறு கூறும் ஆரையூர் கண்ணகை நூல் வெளியீடும் ஆரையூர் கண்ணகை இறுவெட்டும் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

“மறுகா” வெளியீட்டின் அனுசரணையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி இராம இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில் மிகச்சிறப்பாக வெளியிட்டுவைக்கப்பட்டது.

ஆரையூர் கண்ணகை நூல் ஆரையம்பதியை சேர்ந்த க.சபாரெத்தினம்,சொ.பிரசாத் ஆகியோரினால் தொகுக்கப்பட்டுள்ளதுடன் ஆரையூர் கண்ணகை இறுவெட்டு,இலண்டனை சேர்ந்த இ.நிசாந்தனால் தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்துகொண்டதுடன் ,சிறப்பு விருந்தினர்களாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் நவம்,மூத்த கவிஞர் மூனாக்கானா, மூத்த நாடக நெறியாளர் ஆரையுர் இளவல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் முதல் பிரதிநிதியை பொதுவைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட முன்னாள் தலைவருமான ரி.சுந்தரேசன் தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.

குறித்த நூலின் நயவுரையை பேராசிரியர் .செ. யோகராசா வழங்கியதுடன்.குறித்த நூல் மற்றும் அம்பாளின் பக்தி பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக சி.மௌனகுருவின் மாணவி சுசீந்திராவினால் விசேட இசை நிகழ்வும் நடாத்தப்பட்டது.

அண்மையில் ஆரையம்பதி கண்ணகியம்மன் ஆலயம் தொடர்பில் பிழையான தகவல்களை இணையத்தளம் ஊடாக பிரபல எழுத்தாளர் ஒருவர் வெளியிட்டதாகவும் அதன் காரணமாகவே இவ்வாறான நூல் ஒன்றை அவசரமாக வெளியிட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.