நாட்டில் அமைதியின்மையினை ஏற்படுத்துவதற்கு சக்திகள் செயற்பாடு –கோவிந்தன் கருணாகரம்

இந்த நாட்டில் அமைதியின்மையினை ஏற்படுத்துவதற்கு வடகிழக்கிலும் தெற்கிலும் சில சக்திகள் செயற்பட்டுக்கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அமரர் தம்பாப்பிள்ளைமணிக்கம் ஞாபகார்த்தமாக வெற்றிவிநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய கிரிக்கட் போட்டி சுற்றுப்போட்டியில் ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழக பொது விளையாட்டு மைதானத்தில் இந்த சுற்றுப்போட்டி நடைபெற்றுவந்த நிலையில் இறுதிப்போட்டி  சிறப்பான முறையில் நடைபெற்றது.

இறுதிப்போட்டி நிகழ்வுகள் வெற்றிவிநாயகர் விளையாட்டுக் கழக தலைவர் ப. சந்திரு தலைமையில் நடைபெற்றது.

இவ் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி பிரமத விருந்தினராக      கிழக்குமாகாணசபை உறுப்பினரும் முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோ.கருணாகரம் கலந்து கொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த காலத்தில் இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கவனத்தினை செலுத்த முடியாத நிலையிருந்தது.எமது பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் அதற்கு காரணமாக இருந்தது.போராட்டதுறைக்குள் இளைஞாகள் ஈர்க்கப்பட்டதன் காரணாக விளையாட்டுத்துறையினை முன்னெடுக்கமுடியாத நிலையிருந்தது. இன்று விளையாட்டுத்துறை விருத்தியடைந்து இன்று தேசியம் சர்வதேசம் வரையில் சென்று விளையாடும் நிலையுருவாகியுள்ளது.

இந்த நிலைமை நீடித்துச்செல்லவேண்டும்.எமது பிரதேசங்களில் உள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு ஏற்பட்டு ஒரு சுமுகமான சூழ்நிலைஉருவாகNவுண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடிவருகின்றது.ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்திலே இன்று இலங்கைப்பிரச்சினை பேசப்பட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி இறுதி அறிக்கை வரவிருக்கின்றது.அந்த அறிக்கையின் மூலம் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினைப்பற்றிய விமர்சனங்களும் எழுந்துவருகின்றன.தமிழ் தேசிய கூட்டமைப்பு நேர்மையான முறையில் தமிழ் மக்களின் உரிமையினைப்பெற்றுக்கொடுப்பதற்காக போராடிவருகின்றது.

இந்த நாட்டில் அமைதியின்மையினை ஏற்படுத்துவதற்கு வடகிழக்கிலும் தெற்கிலும் சில சக்திகள் செயற்பட்டுக்கொண்டுள்ளது.2004ஆம் ஆண்டு தமிழர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அன்று போராட்டத்தினை குழப்பியடித்த அரசாங்கம்,இன்று நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் ஒரு கட்சி உதயமாகி தலைமையகமும் திறக்கப்பட்டு;ள்ளது. மகிந்தவின் கூட்டுமுன்னணியின் பெயரை ஒத்ததாக அக்கட்சியின் பெயரும் உள்ளது.அவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வது தற்காலத்தில் தமிழர்களுக்கு உள்ள கட்சிகள் போதும்.மேலும் மேலும் பிரிவுகளை ஏற்படுத்தாமல் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக்காணும் வரைக்குமாவது ஒற்றுமையுடன் செயற்பட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையசெய்யவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கலாசார சீரழிவுகள் அதிகரித்த நிலையில் உள்ளது.கிராமங்கள் தோறும் உள்ள விளையாட்டுக்கழகங்கள் இந்த கலாசார சீரழிவுகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.