கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற சிவராத்திரி பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலங்களில் நான்கு சாம விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.


குpழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜைகள் வழிபாட்டு நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நூன்கு சாம பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.யாம்,கும்பபூஜை நடைபெற்று மூலமூர்த்தியாகிய தான்தோன்றீஸ்வரனுக்கு விசேட அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இதேவேளை சிவராத்திரியை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பக்தி இசை நிகழ்வு உட்பட பல்வேறு கலைகலாசார நிகழ்வுகளும் ஆலய முன்றிலில் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் கண்டி வூட்ஸ் நுண்கலைக்கல்லூரியின் மாணவர்களின் நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.