வீதியில் சமைத்து உண்டு ஐந்தாவது தினமாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நான்காவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது.

இரவு பகலாக வீதிகளில் சமைத்து உண்டு தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்;டதாரிகள் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

முத்திய மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியே கடந்த ஐந்து தினங்களாக இவர்கள் இந்த போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 2012-03-31க்கு பின்னர் பட்டம்பெற்ற 4500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் இவர்களுக்கான எந்த தீர்வினையும் வழங்குவதற்கான நடவடிக்கையினை மத்திய மாகாண அரசுகள் எடுக்கவில்லையென பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012-03-31க்கு பின்னர் பட்டம்பெற்ற 1800க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான நியமனங்களை வழங்கும் வகையில் மத்திய மாகாண அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
பட்டதாரிகள் நியமனங்கள் வழங்கப்படும்போது பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில்நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதுடன் வயதெல்லை 45 அதிகரிக்கப்படவேண்டும்இபட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பம் கோரப்படுகையில் ஏற்கனவே அரசசேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்காதவாறு சுற்றுநிருபம் அமையவேண்டும்இகோட்டாமுறையில் நியமனங்கள் வழங்கப்படும் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும்இஇறுதியாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆசிரிய ஆளணி சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு முகாமைத்துவசேவைத்திணைக்களத்தின் அனுமதிபெறப்பட்டு கிழக்கு மாகாண ஆசிரிய வெற்றிடத்தை வெளியிடவேண்டும் அதற்கான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளவேண்டும்இவிண்ணப்பம் கோரப்படும்போது மாற்றுத்திறனாளிகள் விசேட கவனத்தில்கொள்ளப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தராமல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேடிக்கைபார்த்துவருவதாக பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பட்டதாரிகளின் பிரச்சினைகளை பட்டதாரிகளின் பிரச்சினையாக மட்டும்பார்க்காமல் ஒரு சமூகப்பிரச்சினையாகக்கொண்டு மிகவிரையில் தீர்வொன்றினைப்பெற்றுத்தர அனைவும் முன்வரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.