துறைநீலாவணை பிரதான வீதியை நாசம் செய்து அந்த மக்களை அசெகரியப் படுத்தி எதனை சாதிக்க முனைகிறது ஒரு கூட்டம்.

(சசிதுறையூர்)
துறைநீலாவணைக் கிராமத்துக்கு உள் நுளையும் பிரதான வீதியில் இன்று அதிகாலை வேளையில்  கோழிக்கழிவுகளை கொட்டிச் சொன்றிருக்கின்றனர் அயல் கிராம வாசிகள்.
மிகுந்த துர் நாற்றத்துடன் அருவருக்கத் தக்க முறையில்  ,மக்கள் பயணம் செய்ய முடியாதவாறு அசெகரியம் மிக்க நிலையில் வீதி.

துறைநீலாவணை பிரதான வீதியில் தொடர்ந்து இடம் பெறும் இந்த செயற்பாடுகள் துறைநீலாவணை மக்களை பெரிதும் விசனம் கொள்ளச் செய்திருக்கிறது.

மிகக் கேவலமான அருவருக்கத்தக்க செயலை தனிநபர் ஒருவராக செய்திருந்தாலும் இதனை அவர் சார்ந்த ஊர் மற்றம் சமூகத்தின் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

ஏனெனில் இந்த பிரச்சினையானது மிக நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகின்றது. பள்ளிவாசல் நிருவாகம் பொது அமைப்புக்களின், அரசியல் வாதிகள் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சொன்ற போதும், துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பை கொட்டும் செயல் பாடு நிறுத்தப்பட்டாதாக இல்லை.

அண்மையில் பட்டப்பகலில் குப்பை கொட்டவந்த நபர்களை லொறியுடன் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை மாத்திரம் செய்து திருப்பி அனுப்பியிருந்தனர் துறைநீலாவணைக் கிராமத்து இளைஞர்கள். இந்த செயற்பாட்டின் மூலம் இளைஞர்களினதும் கிராமத்தினதும் உயர்ந்த பட்ச பண்பாடு பொறுமை என்பன வெளிப்பட்டிருந்தன.

மேலும் கிராமத்து பொது அமைப்பு ஒன்றின் முயற்சியால் அண்மையில் வீதி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.  இவ்வாறு குப்பை கொட்டும் செயற்பாடு தொடருமானல் கைகலப்பு கிராமங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு.

எனவே கல்முணை மாநகர சபை, அரசியல் வாதிகள், தலையிட்டு இந்த பிரச்சினைக்கான முடிவு காண அவசர வேண்டுகோள் விடுக்கின்றனர் துறைநீலாவணை மக்கள்.