மனித உரிமை கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

 
(லியோன்)

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களினால் ஏற்பாட்டில்  “நாம் அனைவரும்  எழுந்து நின்று எமது உரிமைகளை பாதுகாப்பதற்கு எவ்வாறு செயல்பட போகின்றோம்” என்ற தொனிப்பொருளில்  மனித உரிமை போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது .


இதன் ஆரம்ப நிகழ்வு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய முன்றலில் இருந்து  ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை நடைபெற்றது .

 இதனை தொடர்ந்து  காந்தி பூங்கா முன்றலில் மனித உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது .

இந்த கண்டன போராட்டத்தில்  மட்டக்களப்பு  மாவட்டத்தில் செயல்படுகின்ற  அரச சார்பற்ற நிறுவனத்தின்  பிரதிநிதிகள் , மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் யுத்தத்தினால்  உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர்கள்   ,காணாமல் போனவர்களின்  குடும்ப உறவுகள் மற்றும் சமய தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். 


இதன்போது  தமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் எழு பரிந்துரைகளை கொண்ட  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர்   எ .சி .எ  அசிஸிடம்  கையளிக்கப்பட்டது