மட்டக்களப்பில் இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு

(சசி துறையூர்) 

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து  இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு இன்று பி.ப 02.00 மணியளவில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

 தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN. நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு .சிசிரகுமார,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்காளர் திரு பாலசூரிய,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, மற்றும் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இம் முறை தேர்தலில் வாக்களிப்பை அதிகரிப்பது,  முரண்பாடுகள் இல்லாமல் பிரச்சாரங்களை மேற் கொள்வது தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடையும் உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதம், என்ன என்பது தொடர்பாகவும் வேட்பாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் கடந்த முறை தேர்தலில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டமே முதலிடம் பெற்றது அதனை விட இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரிப்பதற்க்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.