மட்டக்களப்புஉயர்தொழில் நுட்பகல்லூரிமாணவர்கள் தேசியமட்டஆங்கிலதினப் போட்டியில் நாடகத்துறையில் முதலாம் இடம் பெற்றுச் சாதனை

இலங்கைஉயர்தொழில்நுட்பக்கல்விநிறுவகத்தினால் (SLIATE)உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளின்ஆங்கில துறைமாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கிலதினப் போட்டியில் இவ்வருடம் 2016 நடைபெற்றமேற்படிபோட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை”(The Story Of Jewel Anklet)எனும் தலைப்பிலானநாடகத்திற்குமுதலாம் இடத்தினையும்,குழுப்பாடல் மற்றும் பண்பாட்டுரீதியானநவநாகரீகஉடைப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

ஆங்கிலதுறைகற்கைநெறிமட்டக்களப்புஉயர் தொழிலநுட்பக்கல்லூரியில் கடந்தவருடம் ஒருமுழுநேரக் கற்கையாகஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்விமுருகதாஸ் விஜயங்காதுறைத்தலைவராகவும் காணப்படுகின்றார்.

இந்நாடகத்தின் நெறியாள்கைக்குகிழக்குப் பல்கலைக்கழகசுவாமிவிபுலானந்தஅழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் செல்வன் துஜான் மணிஉதவிபுரிந்திருந்தமைகுறிப்பிடத்தக்கதாகும்.

இக்கல்லூரியில் எதிர்வரும் வருடத்திலிருந்துசுற்றுலாமற்றும் விருந்தோம்பல் துறையில் உயர் தேசியடிப்ளோமாபாடநெறிஆரம்பிக்கப்படஉள்ளதாக இக்கல்லூரியின் பணிப்பாளர் .செல்வரெத்தினம் ஜெயபாலன் தெரிவித்தார்.

இக்கல்லூரிமாணவர்கள் கடந்தகாலங்களில் சர்வதேசமற்றும் தேசியபோட்டிகளில்தமதுதிறமைகளைவெளிப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.