இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் 16ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16ஆயிரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் திட்டத்தினை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு ஆரம்பித்துள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இலவசமாக மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் இராசமாணிக்கம் அவர்களின் பிறந்த ஊரான மண்டூரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு மண்டூர் மகா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மன்னாள் தமிழரசு கட்சியின் தலைவரும், பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் அவர்களின் நினைவாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு அவர் விட்டுச் சென்ற மக்கள் பணிகளை தொட்டுச்செல்வதற்காக  பட்டிருப்பு தொகுதியினை மையப்படுத்தி பல்வேறுபட்ட சேவைகளை மக்களின் தேவையறிந்து அவ்வமைப்பின் பணிப்பாளர் சாண் இராசமாணிக்கம் அவர்கள் செய்து வருகின்றார்.

அந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட 16000 மாணவர்களுக்கு 3.5மில்லியன் ரூபா செலவில் இலவசமாக அப்பியாசக்புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று வழங்கப்பட்டுவருகின்றது.