மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் கழகங்களில் அங்கத்துவம் பெற்ற நால்வருக்கு புலமைப் பரிசில் வழங்கி வைப்பு.

(சசி துறையூர்) 

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம்  மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் கழகங்களில் செயற்பட்ட நான்கு யுவதிகளுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா கற்கைநெறி தொடர்வதற்க்கான புலமைப்பரிசில் அண்மையில் வழங்கி வைக்கப்ட்டுள்ளது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட " இளைஞர் அபிவிருத்தி" டிப்ளோமா கற்கை நெறியை தொடர்வதற்க்கான புலமைப்பரிசிலானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மஹரகம தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அதன் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எரந்த வெலியங்கே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. 

01.செல்வி சி.லக்சனா (பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகம்)

02. த.அனேஷா (விபுலானந்தா இளைஞர் கழகம்)

 03. எஸ்.யானுதா விபுலானந்தா இளைஞர் கழகம்)

04.எஸ்.சுலோஜினி விபுலானந்தா இளைஞர் கழகம்) ஆகியோரே புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டவர்களாவர்.

 மேலும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பேர் மாத்திரமே இந்த புலமைப்பரிசில் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

 ஏறாவூர்நகர் பிரதேச செயலாளர் பிரிவில் எம் .கபூர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து எட்வின் பயஸ்ராசா ஆகியோர் இந்த புலமைப் பரிசில் பெற்றுக் கொண்டவர்களாவர்.