மட்டக்களப்புக்கும் ஆவா குழு வரலாம் அவதானமாக இருங்கள்.

(சசி துறையூர்) வடக்கில்  பாரிய சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு மட்டக்களப்பில் நிகழ் காலத்தில் இல்லையாயினும் எதிர்காலத்தில் வரலாம் .அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் இளைஞர்களே. அதற்க்கு ஒரு போதும் நீங்கள் பலிக்கடாவாக கூடாது.

முதலைக்குடா மாகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற இளைஞர் முகாம் வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் தீப்பாசறை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

 நிகழ்வில் தொடர்ந்து பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையினை இட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன் என்னையும் இந்த நிகழ்விற்கு அழைத்தமைக்காக ஏற்பாட்டு குழுவுக்கு நன்றி கூறுகிறேன்.

தீ மூட்டி அதன் வெளிச்சத்தில் உங்கள் திறமையினை ஆடலாக பாடலாகா நாடகமாக கவிதையாக வெளிக்கொணந்தீர்கள் நன்றாக இருந்தது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நல்ல களம் அமைத்து தந்திருக்கிறது, பாராட்டுக்கள். இதே  போன்று உங்கள் ஒவ்வொருவரினதும் எதிர் காலமும் உங்களால் நமது பிரதேசம் மாவட்டம் சமூகம் நாடு என்பவற்றின் எதிர் காலமும் நன்றாக அமைய வேண்டும். அது இளைஞர்களாகிய உங்களால்தான் முடியும். இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இளைஞர்கள் பலர் நல்ல தலைவர்களாக சமூக அக்கறையுடன் தன்நலம் பாராது முன்மாதிரியாக கடந்த காலத்தில் செயற்பட்டார்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தினார்கள் அவர்களை சமூகம் மதித்தது பேற்றுகின்றது, என்பதனை நீங்கள் அறிய வேண்டும்.

நீங்களும் நல்ல தலைவர்களாக வரவேண்டும் அதற்கு ஒழுக்க சீலர்களாக பண்பானவர்களாக வளரவும் மாறவும் வேண்டு. பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டதனை விட வாழ்க்கைக்கான பாடத்தை நல்ல முறையில் கற்றுக்கொள்ளுங்கள். பல்கலைக்கழகம்சென்று பட்டம் பெற்று  வந்தால் மட்டும் போதாது.

படுவான் கரைக்கென ஒரு தனி பன்பாடு ஒழுக்கம் இருந்தது அது இன்று சிதைக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்னும் யுத்த காலத்தின் போதும் அது நல்ல நிலமையில் இருந்தது யுத்தத்தம் நிறைவடைந்ததன் பின் தலைகீழாக மாறிவிட்டது.

தமிழர்களின் தாயகமாக உள்ள வட கிழக்கில் மது பாவனை முன்னனியில் உள்ளது கடந்த வருடம் எமது மாவட்டம் முதலாமிடத்தில் இருந்தது இந்த வருடம் நாம் மூன்றாமிடத்தை அடைந்துள்ளோம்.
ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும் இதனை குறிப்பிடுவதனால் எனக்கு அச்சுறுத்தல் கூட ஏற்படலாம் பரவாயில்லை,  மட்டக்களப்பில் அதிகம் மது விற்பனையாகும் மது பான விற்பனை நிலையங்கள் படுவான்கரை பிரதேசத்தில்தான் உள்ளது அது கூட எமது பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள இரண்டு மதுபான விற்பனை நிலையங்கள் தான் முதலாம் இரண்டாம் இடத்தை  பெறுகின்றது. மூன்றாவது இடத்தினை வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள மது விற்பனை நிலையம் பெறுகின்றது.

நினைக்கும் போது வேதனையாக உள்ளது. இளைஞர்களே எமது பகுதியில் நாளந்த வருமானத்தினை பெறுவதற்க்கே சிரமமாக உள்ள போது எப்படி இந்த நிலமை? ? சிந்திக்க வேண்டும் இளைஞர்கள் நீங்கள் விழிப்புடன் செயற்படவேண்டியுள்ளது.
சித்தித்து நிதானமான முறையில் செயற்படுங்கள் அதற்கு இது போன்ற பயிற்சிமுகாம்கள் வழி காட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.